மலாய் பனீர் / சென்னா - சைவ பேலியோ குறிப்புகள்

By Gayathri Kumar - மார்ச் 27, 2018



மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா ஆகியவற்றில் பெரும்பாலும் இனிப்புகளில் பயன்படுத்தப்படும் மென்மையான பனீர் தான் சென்னா. நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னா வேறு விதமாக செய்வேன். ஆனால் பேலியோ தொடங்கிய பிறகு இந்த முறையை முயற்சித்தேன். இது வரை  செய்ததிலேயே இதுதான் மிகவும் மிருதுவாக உள்ளது. சைவ டயட்டில் பனீரில் செய்யும் தோசை இட்லி எல்லாம் அருமையாக வரும் இந்த பனீர் பயன்படுத்தினால்.  முன்பு தயிர் சேர்த்து பனீர் செய்வேன் ஆனால் இப்போது பாலுடன் அமுல் கிரீம் உபயோகிக்கிறேன். இது கொழுப்பு நிறைந்த பாலில் மேலும் கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் பனீர் ரொம்பவும் மிருதுவாக வரும். இதுவே இப்போது என் விருப்பமான செய்முறை ஆகும்.





நான் கொடுத்துள்ள அளவு 500 கிராம் பன்னீர் கொடுக்கிறது. நீங்கள் கடைகளில் இந்த சுவையும் தரத்தையும் ஒருபோதும் காண முடியாது. இது செய்ய மிகவும் எளிதானது. அதனால் வீட்டிலேயே முயற்சி செய்யுங்கள். நீங்கள் இதை ஒரு முறை சுவைத்துவிட்டால்பிறகு கடைக்கே செல்ல மாட்டீர்கள்.





தேவையான பொருட்கள்:

முழு கொழுப்பு பால் - 2.5 லிட்டர்

அமுல் லோ பேட் கிரீம் - 250 மில்லி

வினிகர் - 3-4 மேஜைகரண்டி



செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் கிரீம் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை நன்றாக கொதிக்க விடுங்கள்.

அது கொதிக்கும் பொழுது, அதை அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

நீரும் பனீரும் சரியாக பிரியவில்லை என்றால் இன்னும் சிறிது வினிகர் சேர்க்கவும்.

நீர் தெளிவாக வந்தவுடன் பனீர் ரெடி என்று அர்த்தம்.

ஒரு சல்லடை மேல் பருத்தி துணி விரித்து திரிந்த பனீரை அதில் போடவும்.

மூடி வைத்து ஒரு மணி நேரம் விட்டு விடவும்.

சுவையான மிருதுவான பனீர் தயார்.





  • Share:

You Might Also Like

0 கருத்துகள்